நிவர் புயல் சேத மதிப்பு: தமிழகம் வரவிருந்த மத்தியக்குழுவின் பயணம் ஒத்தி வைப்பு

சென்னை: நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட வரவிருந்த மத்திய குழுவின் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நவம்பர் 26ம் தேதி வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, கரையை கடந்தது. இதையடுத்து, கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பொருட் சேதம் ஏற்பட்டது.

அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது. நிவர் புயல் சேத மதிப்பை பார்வையிட மத்திய குழு இன்று  வருவதாக இருந்தது.

இதனிடையே வங்க கடலில் உருவாகி உள்ள மற்றொரு புயல் காரணமாக மத்திய குழு வருகை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.