65வயதை கடந்தவர்களுக்கு தபால் ஓட்டு! தேர்தல் கமிஷன் புதிய நடவடிக்கை

டெல்லி:

65வயதை கடந்தவர்களுக்கு தபால் ஓட்டு போடும் வகையில், தபால் ஓட்டு போடும் வயது வரம்பை  குறைத்து தேர்தல் கமிஷன் புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த புதிய நடவடிக்கை காரணமாக  முதல் முதலாக பீகாரிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று  நாளுக்கு தீவிரமடைந்து வருகிறது. தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருகிறது. இருந்தாலும் தொற்று பரவலும் , உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா தொற்று  அக்டோபர், நவம்பரில் மேலும் உச்சம் அடையும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலும் எழுந்துள்ளது. பீகார் சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நவம்பர் மாத்ம் 9-ந் தேதியுடன்  முடிகிறது.  அதனால், அங்கு அக்டோர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக தேர்தலை நடத்துவதும், மக்களை வாக்களிக்க வரவழைப்பதும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மாநில அரசு மற்றும் மத்தியஅரசுடன் விவாதித்து வந்ததது

கொரோனா வைரஸ் தொற்று முதியோருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதால், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வராமல் தபால் ஓட்டு போடுவதற்கு ஏதுவாக 80 வயது என்ற வரம்பு 65 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து, 65வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் ஓட்டும் போடும் வகையில் புதிய திருத்தத்தை  இந்திய தேர்தல்ஆணையம் அறிவித்து  உள்ளது.
ஏற்கனவே நமது நாட்டில், தபால் ஓட்டுக்கள் போட தகுதியானவர்களாக, காவல் பணியாற்றும் ஆயுத படையினர், போலீஸ் படையினர், தேர்தல் பணி ஆற்றுகிற அரசு துறையினர், மாற்று திறனாளிகள் மற்றும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரும் தபால் ஓட்டு போட அனுமதி  உண்டு.
ஆனால், தற்போது கொரோனா அச்சம் காரணமாக, 65வயதை கடந்தவர்களும் தபால் வாக்கு செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த புதிய நடைமுறை பீகார் சட்டமன்ற தேர்தலில் அமலாகிறது. இதனால் முதல்முதலாக இந்த வாய்ப்பை  பீகாரிகள் பெறுகிறார்கள்.