கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் மாநிலங்கள் தனித்து செயல்பட வேண்டாம்: மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்தை விநியோகம் செய்வது தொடர்பாக, நாட்டின் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வ‍ேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷான் இதுதொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

“மத்திய அரசு வழங்கியள்ள ப்ளூபிரின்ட் அடிப்படையில் மாநில அரசுகள் தரவுதளத்தை தயார்செய்ய வேண்டும் மற்றும் தடுப்பு மருந்து சேகரிப்பை பராமரித்து, அதை விநியோகம் செய்வதற்கான போக்குவரத்து வசதியையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

எந்த மாநிலமும், மத்திய அரசின் ஆலோசனையின்றி தங்கள் முடிவுகளை தனித்து மேற்கொள்ளக்கூடாது. தடுப்பு மருந்தை விநியோகம் செய்வது தொடர்பாக மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. எனவே, மாநிலங்கள் வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தலைமைச் செயலாளர்கள் தலைமையில் குழுக்களை அமைத்து, மத்திய அரசின் ஆலோசனைகள் சரியான நேரத்தில் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்தல் வேண்டும்” என்றுள்ளார் அவர்.

நாட்டின், தற்போதைய நிலையில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை(40000க்கும் கீழ்) குறைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.