டில்லி:

ஜூலை மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. மூலம் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி. தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இன்று டில்லியில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு ரூ. 92 ஆயிரத்து 283 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 91 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைக்கும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்தவர்களில் ஆகஸ்ட் 25-ம் தேதி வரையில் 59.57 லட்சம் பேர் தங்கள் வருமான வரி கணக்கை முறையாக தாக்கல் செய்துள்ளனர். மேலும் வருமான வரி செலுத்த ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 72.33 லட்சம் பேர் உள்ளனர்’’ என்றார்.