பிஎம் கேர்ஸ் நிதி தொடர்பான வழக்கு…  தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி:

த்திய பாஜக அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக  தொடங்கிய பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிதிக்கு மாற்ற உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உச்சநீதி மன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

நாட்டின் கொரோனா தொற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து, தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைக்காக   பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் உருவாக்கப்பட்டது.  இதில் கோடிக்கணக்கில் நிதி குவிந்தது.

இதுதொடர்பாக தகவல் உரிமை சட்டப்படி, சமூக நல ஆர்வலர் ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி  என்பவர் பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து தகவல் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம், இது  ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது.

லும் பிஎம்கேர்ஸ் நிதி  தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து,  சிபிசிஎல் எனும் தனியார் தொண்டு நிறுவனம் பிஎம் கேர்ஸ் நிதி அனைத்தை யும் தேசிய பேரிடர் நிதிக்குக மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின்போது, மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டது.

விசாரணையின்போது, ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘பிஎம் கேர்ஸ் நிதி என்பது தாமாக முன்வந்து நன்கொடை வழங்குவோரிடம் இருந்து பெறும் அறக்கட்டளையாகும். தேசிய பேரிடர் நிதி, மாநிலப் பேரிடர் நிதிக்கு வழக்கம்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது’ என வாதிட்டார்.

ஆனால்,  மனுதாரர் சார்பில் வாதாடிய  மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘பிஎம் கேர்ஸ் நிதி தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்துக்கு முரணாக பிஎம் கேர்ஸ் நிதி இருக்கிறது. தேசிய பேரிடர் நிதி தணிக்கை போல,  பிஎம் கேர்ஸ் நிதியும் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்’ எனக வலியுறுத்தினார்.

இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்காமல் தீர்ப்பு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.