நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்கள் உபயோகத்துக்கு தடை: மத்திய அரசு உத்தரவு

டில்லி:

ரசு அலுவலகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை நாடு முழுவதும் உள்ள அனைத்து மத்திய மாநில அரசு அலுவலகங் களும் பொருந்தும் என அறிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசு துறை செயலாளர் களுக்கு கடிதம் எழுதி உள்ளது.

தலைநகரில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் உள்ள நிர்மாண் பவனில், புகையிலை பொருட்கள் எடுத்து வருவதற்கும், அவற்றை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. அதுபோல நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் புகையிலை பயன்பாட்டுக்கு, மத்திய அரசு  அதிரடியாக தடை விதித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரித்தி சுதன் அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறை செயலாளர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  “புகையிலை பயன்பாடு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். புகைபிடிப்பவர்களி டமிருந்து தடையற்ற புகைப்பிடிப்பதால் புற்றுநோய், கார்டியோவாஸ்குலர் நோய்கள் (CVD), நீரிழிவு, நீண்டகால நுரையீரல் நோய், ஸ்ட்ரோக், கருவுறாமை, குருட்டுத்தன்மை, காசநோய் (TB) மற்றும் வாய்வழி குழி போன்ற நோய்கள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், அனைத்து பொது அலுவலகங்கள், பணியிடங்கள், உணவுப்பொருட்களை உள்ளடக்கிய பொது இடம், சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களை (வர்த்தக மற்றும் வர்த்தக உற்பத்தி, விநியோக மற்றும் விநியோகம்) சட்டம் (COTPA), 2003ன் படி தடை செய்யப்படுகிறது.

எனவே, அலுவலகங்களை சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் பராமரிக்க, புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கப்படு கிறது. இந்த உடடினயாக அமல்படுத்த வேண்டும் என்றும்,  தடையை மீறினால், 200 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும், இதுகுறித்து, விழிப்புணர்வு விளம்பர பலகைகளை, அலுவலக வளாகங்களில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.