80 வயதுக்கு மேல் ஆதார் அவசியமில்லை!! மத்திய அரசு புது உத்தரவு

--

டெல்லி:

80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ஆதார் அட்டை கட்டாயம் என்ற உத்தரவு ஜம்மு- காஷ்மீர், மேகாலயா, அசாம் மாநில மக்களுக்கு முழுமையாக பொருந்தாது.

நாட்டின் பிற பகுதிகளில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அட்டை அவசியமில்லை. மத்திய அரசின் இந்த புதிய உத்தரவு ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்திய குடியுரிமை இல்லாதவருக்கு ஆதார் அட்டை அவசியமில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.