ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம்: மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி: டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிககை ஒன்றை அனுப்பி உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதை கருத்தில் கொண்டு, டிரைவிங் லைசென்ஸ், பதிவு சான்றிதழ்கள், உரிமங்கள் ஆகியவை செல்லுபடியாகும் காலம் 2021ம் ஆண்டு மார்ச் 31 வரை செல்லும் என கருத வேண்டும்.

பிப்ரவரி 2020ம் ஆண்டு முதல் காலாவதியான சான்றிதழ்களுக்கும் இது பொருந்தும். சமூக இடைவெளியை பின்பற்றும் இந்த நேரத்தில், இது பொது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.