ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சோனியாவை சிக்க வைக்க சதி….காங்கிரஸ்

டில்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2010-ம் ஆண்டு இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் 12 அதிநவீன விஐபி ஹெலிகாப்டர்களை வாங்க ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் ரூ.362 கோடி லஞ்சம் கைமாறியதாக புகார் எழுந்தது.

இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில்,‘‘அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு கிறிஸ்டியன் மைக்கேல் துபாயில் கைது செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக சோனியாகாந்தி பெயரையும் இந்த வழக்கில் சேர்க்கும் வகையில் போலி வாக்குமூலம் கொடுக்க கிறிஸ்டியன் மைக்கேலை மத்திய பாஜக அரசால் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார். இந்த தகவலை அவரது வக்கீல் ரோஸ்மேரி பாத்ரிஸி உறுதிபடுத்தியுள்ளார்’’ என்றார்.