போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும்: டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அவர்களின் போராட்டம் 6வது நாளை எட்டி உள்ளது.

மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும் விவசாய சங்க பிரதிநிதிகள் நிராகரித்துவிட்டனர். இந் நிலையில், போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று டெல்லி போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் அங்கு போராடும் விவசாயிகளை சந்தித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு முழுமையாக ஏற்று, அதை நிறைவேற்ற வேண்டும். காரணம் அந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் அடிப்படை தேவைகளை உறுதி செய்ய அவர்களை நேரில் பேச வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.