பில் கேட்ஸின் மருத்துவ அறக்கட்டளைக்கு மத்திய அரசு தடை

டெல்லி:

மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருப்பதன் காரணமாக மைக்ரோ சாப்வேர் நிறுவனரான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் தீவிர தேசிய சுகாதார மிஸனுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த அறக்கட்டளையுடனான நிதி கூட்டு தொடர்பான உறவுகளை தடுப்பூசி ஆலோசனை அமைப்பான தேசிய தடுப்பூசி தொழில்நுட்பு ஆலோசனை குழு துண்டித்துள்ளது.

இந்த குழு பில்கேட்ஸ் அறிக்கட்டளையில் நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் செயல்பட்டு வந்தது. இந்த குழு தற்போது முழுக்க முழுக்க சுகாதார அமைச்சகத்தின் நிதியுதவியுடன் செயல்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதர திட்டங்களான ஸ்வதேஷி ஜக்ரன் மஞ்ச் திட்டம் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த மருத்துவ நிபுணர்களிடம் இந்த தகவல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ நிறுவனங்களுடன் இந்த அறக்கட்டளை கூட்டு வைத்திருப்பதால் தடுப்பூசி தொடர்பான நாட்டின் கொள்கைக்கு பங்கம் ஏற்படும் என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருப்பதை அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் சுனில் ராமன் உறுதி படுத்தியுள்ளார். ‘‘அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்’’ என்று ஸ்வதேஷ் ஜக்ரன் மஞ்ச் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஸ்வனி மகாஜன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘நமது உள்நாட்டு கொள்கைகளில் வெளிநாடுகளின் அழுத்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அதை தவிர்க்க வேண்டும்’’என்றார். தேசிய குடும்ப சுகாதார நலத்துறை நிதியுதவியுடன் இந்த திட்டம் முழு அளவில் செயல்படுத்தப்படுகிறது.