டில்லி

குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் மக்கள் மருந்தகத்தில் மத்திய அரசு நோயியல் பரிசோதனை மையங்கள் அமைக்க உள்ளது.

நாட்டில் கொரோனா பரவு வருவதால் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகள் அதிகரிக்க வேண்டிய நிலையில் உள்ளன.   இதையொட்டி பல தனியார் பரிசோதனை நிலையங்களை அரசு நியமித்தது.   இந்த தனியார் பரிசோதனை கட்டணம் செலுத்தப் பலருக்கும் பணமில்லாததால் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ள முன் வந்தது.   இதனால் பல தனியார் நிலையங்கள் பரிசோதனை செய்ய முன்வந்தனர்.

ஆனால் அரசு தரப்பில் வரவேண்டிய நிலுவை மிகவும் தாமதமாக அளிக்கப்படுவதால் பலர் விலகி உள்ளனர்.  அத்துடன்  அரசு எப்போதும் குறைவான தொகைக்குச் சோதனை செய்வோரை மட்டுமே தேர்வு செய்யும் என்பதால் பல பெரிய பரிசோதனை நிலையங்கள் இந்த சேவை அளிக்க முன்வரவில்லை.

கடந்த 17 ஆம் தேதி அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு சுகாதார உட்கட்டமைப்புக்கான செலவுகளை அதிகரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார்.  அதன் அடிப்படையில் குறைந்த விலையில் மருந்துகளை வழங்கும் மக்கள் மருந்தகம் சார்பில் நோயியல் பரிசோதனை மயங்கள் தொடங்க உள்ளது.   விரைவில்  முழு பரிசோதனை நிலையம் ஒவ்வொரு மருந்தகத்திலும் அமைக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.