கிரண்பேடியை வைத்து புதுச்சேரி அரசை பலவீனப்படுத்த முயற்சி! சஞ்சய்தத் குற்றச்சாட்டு

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில  காங்கிரஸ் அரசை ஸ்திரமற்றதாக்க கிரண் பேடியை பாஜக பயன்படுத்தி வருவதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் குற்றம் சாட்டி உள்ளார்.

புதுச்சேரி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு நிர்வாகத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு வருகிறார். இதன் காரணமாக மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல்கள் நடைபெற்று வருகின் றன.  மத்திய அரசின் நிலைப்பாட்டில் காங்கிரஸ் அரசாங்கத்தை சீர்குலைக்க மட்டுமே கிரண்பேடி  செயல்பட்டுள்ளார் என ஏ.ஐ.சி.சி. செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் “மக்களுக்கு எதிரான மக்கள்” முறையில் பேடி செயல்பட்டதாகவும்,  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை சீர்குலைக்க மற்றும் தொந்தரவு செய்ய மட்டுமே லெப்டினன் கவர்னராக  கிரண்பேடி இங்கு பதவியில் இருக்கிறார் … சமூக நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் தடைகளைத் தடுக்க என்டிஏ அரசாங்கம் அவரை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது” என்று ம் அவர் குற்றம் சாட்டினார்.

அண்மையில் பொங்கல் பரிசு பரிசுத் தொகை குறிப்பிட்டு பேசிய சஞ்சய் தத், அனைத்து கார்டு தாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், கிரண்பேடி, வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பிரச்சினை ஏற்படுத்தியதை சுட்டிக் காட்டியவர்,  “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஸ்திரமின்மை ஆக்க கிரண்பேடி சதி செய்து வருவதாகவும் கூறினார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் பிளவு ஏற்படாததால் நாராயணசாமி அரசாங்கத்தை சீர் குலைக்க பா.ஜ.க. ஆளுநரின் அலுவலகத்தில் ராஜ் நிவாஸைப் பயன்படுத்த பாஜக முயற்சித்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AICC secy Sanjay thath, destabilise Congress govt, Kiran Bedi, Narayanasamy, கிரண்பேடி, சஞ்சய் தத், நாராயணசாமி, புதுச்சேரி
-=-