ஒலிம்பிக்கில் கபடி – முயற்சிகளை முன்னெடுப்போம் என்கிறார் கிரண் ரிஜிஜூ

புதுடெல்லி: ஒலிம்பிக் போட்டிகளில் கபடியையும் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றுள்ளார் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

நாடாளுமன்றத்தில் பேசும்போது அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது, “இந்தியாவிலிருக்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதன்மூலம் மொத்தமாக 2880 விளையாட்டு வீரர் – வீராங்ககனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடியை, ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு முன்னெடுத்துச் செல்லும்.

மேலும், விளையாட்டு என்பது மாநிலம் தொடர்பான ஒன்று என்பதையும் மறந்துவிடலாகாது. எனவே, சிறப்பான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேக் கொண்டுவரும் கடமை மாநில அரசுகளுக்கு உண்டு” என்றார் அமைச்சர் கிரண் ரிஜிஜூ.