மத்திய தகவல் தொடர்பு அமைச்சக இயக்குநருக்கு கொரோனா பாதிப்பு

டில்லி

த்திய தகவல் தொடர்பு அமைச்சக முதல் நிலை இயக்குநர் கே எஸ் தாட்வாலியா கோரோனா பாதிப்பால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு அறிவித்து அதைப் பலமுறை நீட்டித்தும் பாதிப்பு குறையவில்லை.

இந்தியாவில் இதுவரை பாதிப்பு 2.57 லட்சத்தைத் தாண்டி உள்ளது.

கடந்த 3 ஆம் தேதி அன்று பிரதமர் ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டினார்.

இதில் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சக முதல் நிலை இயக்குநர் கே எஸ் தாட்வாலியா கலந்துக் கொண்டார்.

அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

நேற்றிரவு அவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.