எம்.ஆர்.ராதா, குஷ்புவுக்கும் விழா எடுக்கலாமே, ஆர்.எஸ். எஸ்.!

நெட்டிசன்:

வெங்கடேசன் கனகராஜ் ( Venkatesan Kanakaraj) அவர்களின் முகநூல் பதிவு:

ம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை ஆர்எஸ்எஸ் கொண்டாடப்போகுதாம். ஏனெனில் அவர் இந்து மத்த்தின் மீது நம்பிக்கை கொண்டவர். மதமாற்றத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.
மக்கள் செல்வாக்கு மிக்க நடிகராகவும், அரசியலில் கொடி கட்டி பறந்தவராகவும் விளங்கியவரை கொண்டாடுவதில் தவறு ஏதும் இல்லை மகிழ்ச்சி.

அப்படியே இதுவும் செய்தால் மகிழ்ச்சி.

untitled-2

பல சினிமாக்களில் எம். ஆர். ராதா பட்டை எல்லாம் போட்டு சாமி பக்தராக பின்னி பெடல் எடுத்திருக்கிறார். அவரையும் தி.க சொந்தம் கொண்டாடுகிறது. அவருக்கும் பதிலுக்கு ஆர்எஸ்எஸ் விழா எடுக்கலாம்.

ஏன் இப்ப கூட குஷ்பு ( பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்தவர் என்பதற்காக தி.க. வீரமணி பாராட்டு பத்திரம் வாசித்தார்) பொது சிவில் சட்டம் தேவைன்னு உங்க அடிப்படை ஐடியலாஜிக்கே குரல் கொடுத்திருக்கார். அவ்வளவு ஏன் அவருக்காக எங்க தமிழ் ரசிகர்கள் கோயிலே கட்டி கும்புட்டாங்களாம். அப்படிப்பட்ட குஷ்புவுக்கு கூட பிறந்தநாள் எடுக்கலாம்!.

கார்ட்டூன் கேலரி