கொழும்பு

லங்கை தொடர் குண்டு வெடிப்பை நடத்தியது இலங்கை தவ்ஹீத் ஜமாத் என்னும் உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நேற்று ஈஸ்டர் தினத்தன்று காலையில் 8.45 மணி முதல் தேவாலயங்கள், சொகுசு ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 290 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது முக்கியமாக வெளிநாட்டுப் பயணிகளையும் கிறித்துவ மக்களையும் குறிவைத்து தாக்கப்பட்ட்ட குண்டு வெடிப்பு என கூறப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இலங்கை அரசு இந்த குற்றத்தை செய்தது உள்நாட்டு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தவ்ஹீத் ஜமாத் என தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, “இலங்கை தவ்ஹீத் ஜமாத் நடத்தி உள்ள இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டினர் உதவியும் இருக்கலாம் என்னும் கொணத்தி விசாரனை நடைபெறுகிறது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகள் எச்சரிக்கை விடுத்த போதிலும் அதை கவனிக்காமல் விட்டுவிட்டோம்.” என தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் இலங்கை தவ்ஹீத் ஜமத் என்பது சிறிய அளவிலான பயங்கரவாத இயக்கம் எனவும் அந்த இயக்கம் இவ்வாறு குண்டு வெடிப்பு நிகழ்த்தி இருந்தால் அதற்கு வெளிநாட்டு சக்திகளின் உதவி இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.