சாட்விக் போஸ்மேனுக்காக புதிய டைட்டில் கிரெடிட்ஸ் ஒன்றை வெளியிட்ட மார்வெல் நிறுவனம்…..!

 

2017-ம் ஆண்டு சாட்விக் போஸ்மேனை வைத்து ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்துக்காகவே ஒரு முழு நீளப் படத்தைத் தயாரித்தது மார்வெல் நிறுவனம். படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் உலகம் முழுவதும் மார்வெல் ரசிகர்களின் மனதில் ப்ளாக் பேந்தராகவே பதிந்தார் போஸ்மேன்.

இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த போஸ்மேன் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். அவரது மறைவு ஹாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சாட்விக் போஸ்மேனுக்காக புதிய டைட்டில் கிரெடிட்ஸ் ஒன்றை மார்வெல் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. வழக்கமாக மார்வெல் படங்களின் தொடக்கத்தில் வரும் இந்த டைட்டில் கிரெடிட்ஸின் மார்வெல் சூப்பர்ஹீரோ கதாபாத்திரங்கள் இடம்பெறும். ஆனால் தற்போது இதில் முழுக்க முழுக்க சாட்விக் போஸ்மேனின் புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளது மார்வெல் நிறுவனம்.