மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு கோல்டன் குளோப் விருது….!

மார்வெல் நிறுவனத்தின் புகழ்பெற்ற ‘ப்ளாக் பேந்தர்’ கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் சாட்விக் போஸ்மேன்.

2016-ம் ஆண்டு போஸ்மேனுக்கு பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகச் சிகிச்சை மேற்கொண்டு வந்தார் போஸ்மேன்.

சிகிச்சை பலனின்றி சாட்விக் போஸ்மேன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ப்ளாக் பாட்டம்’ என்ற படத்தில் நடித்ததற்காக சாட்விக் போஸ்மேனுக்கு சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்தப் பிரிவில் இறந்த பின்பு கோல்டன் குளோப் விருது வாங்கும் இரண்டாவது நபர் சாட்விக் போஸ்மேன். இதற்கு முன்பு 1977ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நடிகரான பீட்டர் ஃபின்ச் என்பவருக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.