நடிகர் விஜய் கலந்துகொண்ட விழாவில் நாற்காலி வீச்சு!

டிகர் விஜய் கலந்துகொண்ட விழாவில் உற்சாக மிகுதியில் ரசிகர்கள் நாற்காலிகளைத தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர், ஆனந்து. புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவரது மகள் திருமண வரவேற்பு விழா, புதுச்சேரியை அடுத்த நாவற்குளம் சங்கமித்திரா மகாலில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில், நடிகர் விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். அவர்களைக் காண, ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டனர். இதனால்  திருமண மண்டபத்தில் கூட்டம் நிரம்பிவழிந்தது. தவிர அந்தப் பகுதியில்  கடுமையான போக்குவரத்து நெரிசலும் உருவானது.

விஜய் மேடையேறி மணமக்களை வாழ்த்தச் சென்றபோது, அவரைக் காண ஒரே நேரத்தில் ரசிகர்கள் பலரும் மேடைக்கு வர முயன்றனர். இதனால் கடும் தள்ளுமுல்லு  ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அங்கிருந்த நாற்காலிகள் ரசிகர்களால் சூறையாடப்பட்டன. நிலைமையைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில், காவல்துறையினர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவை மண்டபத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியில் அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது  அப்போது கூட்ட நெரிசலில் விஜய்யும், அவரது மனைவியும்  சிக்கித்தவித்தனர். பிறகு ஒருவழியாக அவர்கள் வெளியே வந்து, சென்னை திரும்பினர்.