வெளியானது விஷாலின் ‘சக்ரா’ பட ட்ரெய்லர் முன்னோட்டம்….!

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் ‘சக்ரா’.

விஷால் நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா காசன்ட்ரா முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்ப திரில்லராக உருவாகிவரும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார். ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியமும், படத்தொகுப்பை சமீர் முகமதுவும் பார்த்துக் கொள்கிறார்கள். எஸ்.கண்ணன் கலை இயக்குனராகவும், அனல் அரசு சண்டைக் காட்சிகளையும் அமைத்துள்ளனர்.

இந்த படம் அனேகமாக தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று காலை இத்திரைப்படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.