தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’ ….!

புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’.

இந்தக் கொரோனா ஊரடங்கில் அனைவருமே படம் குறித்த தகவல்கள், டீஸர், ட்ரெய்லர் என வெளியிடத் தயங்கிய நேரத்தில், விஷால் ‘சக்ரா’ படத்தின் ட்ரெய்லரை 4 மொழிகளில் வெளியிட்டார்.

இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது.

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார்.

தற்போது திரையரங்குகள் எப்போது திறக்கப்படும், படங்கள் எப்போது வெளியாகும் என்ற சூழலே தெரியாமல் உள்ளது. இதனால், தீபாவளிக்கு ஓடிடி தளத்தில் ‘சக்ரா’ வெளியாகும் என்று விஷால் பேட்டியளித்துள்ளார்.