கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர்கள் போர் வீரர்களை போல மோத வேண்டும்! பிசிபி ஷஹராயர் கான்

பர்மிங்ஹாம்.

நாளை மாலை இந்தியா பாகிஸ்தான் இடையே சாம்பியன் டிராபி போட்டி நடைபெற்ற உள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் போர் வீரர்களை போல இந்திய அணியுடன்  மோத வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஷஹராயர் கான் கூறியுள்ளார்.

பர்மிங்ஹாமில் பாகிஸ்தான் வீரர்களுடன் உரையாடிய ஷஹராயர் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்,  போர்வீரர்களைப் போல் செயல்பட்டு கோஹ்லி, மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்களை தோல்வியுற செய்ய வேண்டும் என்றும்,

உலகம் முழுவதும் உள்ள பாகிஸ்தான் ரசிகர்கள், போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அவர்களை நமதுஅணி வீரர்கள் ஏமாற்றிவிடக் கூடாது என்று பேசி பாகிஸ்தான் அணி வீரர்களை உசுப்பேற்றி உள்ளார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசும்போது,  தங்களிடம் இளமையான திறமையான வீரர்கள் சர்ஃபராஸ் அகமது தலைமையில் இந்தியாவை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும்,  வெற்றி பாக் வீரர்களுக்கே எனவும் கூறினார்

விளையாட்டின் போது இந்தியாவின் மீது எந்த ஒரு காழ்ப்புணர்வும் காட்டவேண்டாம் எனவும் எச்சரித்தார்.

சமீபகாலமாக காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருவதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நடைபெற்று வரும் வேளையில்,

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் ஷஹராயர் கான் பாகிஸ்தான் அணியினரை உசுப்பேற்றியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed