சாம்பியன்ஸ் டிரோபி: வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு நுழைந்தது

பர்கிங்ஹாம்:

சாம்பியன்ஸ் டிரோபி அரையிறுதி போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

இங்கிலாந்து பர்மிங்காமில் இன்று நடைபெற்ற 2வது அரை இறுதி போட்டியின் ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் இந்தியா, ‘ஏ’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த வங்க தேசத்தை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வங்காளதேச அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 265 ரன்களை வங்காளதேசம் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அபாரமாக விளையாடியது. வங்க தேசத்தின் பந்து வீச்சை நாலாபுறமும் இந்திய வீரர்கள் அடித்து தள்ளினார்கள். இறுதியில் 40.1 ஓவர்களிலே ஒரு விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா எதிர்க்கொள்கிறது.

வரும் 18-ம் தேதி இப்போட்டி ஓவல் மைதானத்தில் நடக்கிறது.