சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி….அர்ஜெண்டினாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆம்ஸ்டர்டேம்:

சாம்பியஸ் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து ப்ரீடா நகரில் நேற்று தொடங்கியது.

இதில் இந்தியா, பாகிஸ்தான், அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தாவை வீழ்த்தியது. இன்று இந்தியா, அர்ஜெண்டினா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க முதலே இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

முதல் பாதியின் 17-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் பயன்படுத்தி முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 28-வது நிமிடத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங் அணியின் 2வது கோலை அடித்தார்.

29-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணி ஒரு கோல் அடித்தது. 2வது பாதியில் ஆட்டம் பரபரப்பாக இருந்தபோதும் இரு அணிகளும் கால் எதுவும் அடிக்கவில்லை. இறுதியில் இந்தியா 2&1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 27-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.