சாம்பியன்ஸ் ஹாக்கி….இந்தியா, பெல்ஜியம் போட்டி டிரா

பிரிடா:

சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நெதர்லாந்து பிரிடா நகரில் நடந்து வருகிறது. இன்று நடந்த லீக் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணிகள் மோதின.

முதல் பாதியின் 15-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். முதல் பாதியில் பெல்ஜியம் கோல் அடிக்கவில்லை. இந்திய அணி 1&-0 என முன்னிலை பெற்றது.

2வது பாதியில் பெல்ஜியம் அணியின் கோல் போடும் முயற்சியை இந்திய வீரர்கள் சாதுர்யமாக செயல்பட்டு முறியடித்தனர். 59-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பெல்ஜியம் வீரர் லாயில் லைய்பேர்ட் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1&-1 என டிராவில் முடிந்தது.