சாம்பியன்ஸ் டிரோபி: பாகிஸ்தானுக்கு இலங்கை 237 ரன்கள் இலக்கு

கார்டிப்:

சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. கார்டிப்பில் இன்று நடக்கும் கடைசி லீக் போட்டியில் இலங்கையும், பாகிஸ்தானும் (பி பிரிவு) மோதுகின்றன. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 96 ரன் வித்தியாசத்தில் தோற்ற இலங்கை அணி அடுத்து இந்தியாவிடம் வெற்றி பெற்றது. இதே போல் பாகிஸ்தானும் ஒரு வெற்றியும், ஒரு தோல்வி கண்டுள்ளது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். தோற்கும் அணி வாய்ப்பை இழந்து வெளியேறும். போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 49.2 ஓவரில் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணிக்கு 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி