‘சாணக்யன்:’ மம்முட்டியின் டப்பிங் படம் விரைவில் வெளியீடு

லையாளத்தில் கடந்த ஆண்டு  கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ரிலிசான மம்முட்டியின் “மாஸ்டர்பீஸ்” என்ற மலையாளப்படம் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில். தமிழில்  சாணக்யன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் விரைவில் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் மம்முடியுடன், வரலட்சுமி, பூனம் பாஜ்வா, மகிமா நம்பியார், உன்னி முகுந்தன், முகேஷ், உள்பட பலர் நடித்துள்ளனர். இசையை தீபக் தேவும், ஒளிப்பதிவை வினோத் இளம்பள்ளியும் மேற்கொண்டிருந்தனர். படத்தை இயக்கியவர் அஜய் வாசுதேவ்.

துப்பறியும் கதையான இதில், நடைபெறும் ஒரு கொலையை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிப்பதே கதையின் அம்சம். இந்த படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.