தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை:

மிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வேலூர், திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

காற்றின் திசை மாறுபாடு காரணமாக கடலில்  அதிக காற்று வீசும் என்பதால் ஆந்திர, கர்நாடக, குஜராத் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலில் மணிக்கு 50-60கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் வரும் 16ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இவ்வாறு கூறி உள்ளது.