தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை:

மிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல்லில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

மேலும், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி , விருதுநகர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may have missed