வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பான சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இன்று வெப்பச்சலனம்  மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி  காரணமாக சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்யும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may have missed