நம்பிக்கையில்லா தீர்மானம் வரலாம்…ஸ்டாலின் சூசகம்

சென்னை:

சட்டமன்றத்தில் வாய்ப்பு ஏற்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என ஸ்டாலின் கூறினார்.

திமுக எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் பொன்முடி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சட்டப்பேரவையில் வாய்ப்பு வந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம், குட்கா போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன’’ என்றார்.