ஆசிய விளையாட்டு: 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சந்த் டூட்டி வெள்ளி பதக்கம் வென்றார்

ஜகார்த்தா:

ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சந்த் டூட்டி வெள்ளி பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று தடகளத்தில் 100 மீட்டர் ஓட்டம் நடைபெற்றது.இதில் இந்தியாவின்  சந்த் டூட்டி வெள்ளிபதக்கம் வென்றார். இவர் 11.32 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார்.

மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமாதாஸ் வெள்ளி பதக்கமும், ஆண்கள் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அனாஸ் யசியா வெள்ளி பதக்கமும் வென்றனர். பதக்கப்பட்டியலில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் என 35 பதக்கங்களுடன் 9-வது இடத்தில் இந்தியா உள்ளது. 172 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் உள்ளது.