ஐசிஐசிஐ வங்கி வங்கி தலைவர் பதவியில் இருந்து சந்தா கோச்சார் ராஜினாமா

டில்லி:

ந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி வங்கியின் மேலாண் இயக்குனர் பதவியில் இருந்து சந்தா கோச்சார் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதிலாக சந்திப் பக்ஷி முதன்மை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார்.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் மீது  வீடியோகான் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவி செய்ததாக புகார் கூறப்பட்டது.

ஐசிசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சார்

இந்த நிலையில், இன்று  நடைபெற்ற ஐசிசிஐ வங்கி வாரிய போர்டு கூட்டத்தில் சந்தா கோச்சாரின் ராஜினாமா கோரிக்கை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மும்பை பங்கு சந்தைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கையை மும்பை பங்குசந்தை நிர்வாகம் உடடினயாக ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வீடியோகான் விவகாரம் தொடர்ந்து,  ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக சச்சார் கோரியிருந்தார். இந்த நிலையில், வங்கியின் போர்டு டைரக்டர்கள் கூட்டத்தில் கோச்சாரின் ராஜினாமா ஏற்பட்டுள்ளது.

சந்தா கோச்சர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதால் தற்போது நடைபெற்றுள்ள மோசடி குறித்த விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், இது ஒரு வகையில் நன்மையே என்றும் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து வங்கியின் புதிய தலைமைசெயல் அதிகாரியாக சந்தீப் பக்ஷி நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் 2023ம்ஆண்டு அக்டோபர் 3ந்தேதி வரை பதவியில் நீடிப்பார்.

ந்தா கோச்சார் மீது வீடியோகான் நிறுவனத்திற்கு மறைமுகமாக உதவி செய்ததாக புகார் கூறப்பட்டது.  2008ம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தொடங்கிய புதிய நிறுவனத்தில் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களும் பங்குதாரர்களாக சேர்ந்தனர்.

இதற்கிடையில்,  ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் பெற்றது. இதை நடைபெற்று முடிந்த 6 மாதத்தில் வேணுகோபால், தீபக் மத்தியிலான உரிமை பரிமாற்றம் நடந்துள்ளது என புகார் எழுந்தது.

வீடியோகான் தலைவர் வேணுகோபால்  இந்திய வங்கிகளில் இருந்து சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். மொத்த கடன் தொகையில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகையில் நிலுவையில் இருப்பது வெறும் 10 சதவீதம் தான். அதாவது 2,000 கோடி ரூபாய். ஐசிஐசிஐ வங்கியில் வாங்கிய கடனில் 86 சதவீதம் இன்னும் வேணுகோபால்  திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிது. இந்த கடன் புகாரில் சந்தா கோச்சாரின் கணவர் இடம் பெற்றிருப்பதால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார். அதைத்தொடர்ந்து அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு உள்ளது.

சந்தா கோச்சார்,  ஆசியாவின் செல்வாக்கு நிறைந்த பெண்களின் பட்டியலில் 2வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.