சர்வதேச விமானச் சேவையா அல்லது கோதுமை கிடங்காசண்டிகர் சர்வதேச விமான நிலையம் ???
2016,  ஏப்ரல் 7, வியாழக்கிழமை அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம், மத்திய அரசு மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவை (AAI) சண்டிகர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சர்வதேச விமானங்களைத் தொடங்கத் தவறியதற்காக கடுமையாக கண்டித்தது. மேலும், அதற்கான நடவடிக்கைகளை விரைவில் தொடங்காவிட்டால் அதை ஒரு கோதுமைக் கிடங்காக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டது .
 
கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று, பிரதமர் நரேந்திர மோடி  சண்டிகருக்கு வருகை தந்த போது, இவ்விமான நிலையத்தை திறந்து வைத்தார்.  இந்த புதிய விமான நிலைய முனையத்திற்காகவும் அதற்குத் தேவையான உள்கட்டமைப்பிற்காகவும்  ரூ 1,400 கோடிக்கும் மேல் மத்திய அரசாலும் பஞ்சாப் மாநிலத்தாலும் மற்றும் பிற பங்குதாரர்களாலும் செலவு செய்யப்பட்டுள்ள போதும் கூட  இன்னும் சர்வதேச விமானங்களின் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவில்லை.
chandigarh international airport 2
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்காகத் வாதாடிய  உதவி சொலிசிட்டர் ஜெனரல்,  சேதன் மிட்டல், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நடவடிக்கைகளைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளதாக, உயர் நீதிமன்ற பெஞ்சிடம் கூறினார்.
“சுங்கத்துறை மற்றும் குடிவரவு வசதிகள் விமான நிலையத்தில் வந்த பிறகு, விமான சேவையைத் தொடங்க இண்டிகோவிற்கு 45 நாட்கள் தேவைப்படும்,” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். மொஹாலி இண்டஸ்ட்ரி அசோசியேசனுடைய மனுதாரர்களின் ஆலோசகர் புனீத் பாலி, இடையில் குறுக்கிட்டு இதற்கு ஒரு காலக்கெடு விதிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் அடுத்த விசாரணையின் போதும் ஏதாவது சாக்குக் கூறுவார்கள் என்று கூறினார்.
“உங்களால் நடவடிக்கைகளைத் தொடங்க முடியவில்லையெனில், கோதுமை சேமிப்பிற்காக அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இதில் தலையிடுவது (நடவடிக்கைகளைத் தொடங்க ஆணையிடுவது) உயர் நீதிமன்றத்தின் வேலை அல்ல. சேவைகளைப் பழைய முனையத்திற்கு மாற்றி புதிய முனையத்தை  மூடுங்கள்,” என்று அனுசரித்து, அரசாங்கத்தின் பதில் எரிச்சலூட்டுவதாகவும் மேலும் இது ஒரு வழக்கமான அதிகாரத்துவ பதில் என்றும் நீதிமன்றம் அதிகாரிகளை “நம்பவில்லை” என்றும் உயர் நீதிமன்ற பெஞ்ச் நீதிபதிகள் எஸ் எஸ் சாரோன் மற்றும் குர்மித் ராம் கூறினார்.
சிவில் விமானப் போக்குவரத்துச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமான சேவையைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளதாக மிட்டல் உயர் நீதிமன்ற பெஞ்சிடம் கூறினார். ஏர் இந்தியாவைத் தனது வழக்கமான நடைமுறைகளைத் தொடங்கி இரண்டு உள்ளூர் இடங்கள் உட்பட சர்வதேச இலக்குகளுக்கு விமான சேவையை  சண்டிகரிலிருந்து தொடங்க உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ கோடைக்காலத்தில் விமான சேவையைத் தொடங்க எண்ணியது. அது மும்பை-துபாய்-சண்டீகர்-தில்லி துறைகள் மற்றும் தில்லி-சண்டிகர்-துபாய் மும்பை துறைகளிலும் விமான சேவையைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, என்று மிட்டல் தெரிவித்தார்.
“அவர்கள் மும்பை விமான நிலையத்தில் இடங்கள் பெற முடியவில்லை என்றால், மும்பைக்குப் பதிலாக  ஹைதெராபாத்தில் தொடங்குவர். விமான போக்குவரத்துச் செயலாளர் விமானப் போக்குவரத்திடம் செயற்பாட்டை ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். விமான நிலையத்தில் சுங்க மற்றும் குடியேற்றம் வசதிகள் தயாரான பிறகு 45 நாட்களுக்குள் இண்டிகோ சேவையைத் தொடங்கும்” என்றும் ஆரம்பத்தில் இரண்டு அல்லது மூன்று இந்திய விமானகள் இருந்தால், அவர்களுடைய ஈடுபாட்டைக் கண்டு பிற சர்வதேச விமானங்களும் தங்களுடைய ஆர்வத்தைக் காட்டுவர் என்று கூறினார்.
chandigarh international airport
இந்த தகவல் சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற பெஞ்ச் ஏப்ரல் 25 தேதிக்குள் குடிவரவு மற்றும் சுங்க வசதிகளாய் அமைக்க AAI க்கு ஆணையிட்டுள்ளது.
மேலும் உயர் நீதிமன்றம், AAI மற்றும் மத்தியரசிற்கு  சர்வதேச  சேவையைத் தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கைத் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளது.
குடுவரவு வசதிகள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டாலும் கூட, குடியேற்றம் ஊழியர்களுக்குப் பயிற்சி தர குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவைப்படும் என AAI ஆலோசகர்  அதுல் நந்தா வசதி , ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். இதற்கு ஆதாரமாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் வைக்கப்பட்டது.
அந்தத் தீர்மானங்களின் படி, பஞ்சாப் அரசாங்கம் இந்த நோக்கத்திற்காக 17 அதிகாரிகள் கொடுக்கும் என்று கூறியுள்ளது. பயிற்சி புலனாய்வு பணியகம் (BOI) மூலம் கொடுக்கப்பட வேண்டும். இதற்கான அனைத்டு செலவுகளையும் தற்போதைக்கு பஞ்சாப் ஏற்றுக்கொண்டு, பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.