மத்தியஅரசு தலையீடு: அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் உயரதிகாரிகள்! 3வதாக யுபிஎஸ்எஸ்எஸ்சி தலைவர் ராஜினாமா

டில்லி:

ரசு நிர்வாகத்தில் பாஜ மத்திய, மாநில அரசு தலையீடு காரணமாக உயர் அதிகாரிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர் உறுப்பினராக இருந்த சுர்ஜித் பாலா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக கூறினார்.

இந்த நிலையில், தற்போது உத்தரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் சந்திர பூஷன் பலிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று முன்தினம், மத்திய அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா, பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். அப்போது, மோடி அமைச்சரவையில் பங்குபெற்றுள்ள மத்தியஅமைச்சர்கள் அனைவரும் ரப்பர் ஸ்டாம்புகள் என்றும், அமைச்சரவை செயல்பாடுகளில் அமித்ஷா தலையீடு இருப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாகவே, உச்சநீதி மன்ற நீதிபதிள் நியமனத்தில் மோடி அரசின் தலையீடு, ரிசர்வ் வங்கியில் தலையீடு, நாட்டின் உயர்ந்த புலனாய்வு அமைப்பான சிபிஐ நிர்வாகத்தில் தலையீடு என அனைத்து தன்னாட்சி பெற்ற உயர் அமைப்புகளின் நிர்வாகங் களில் பாஜக அரசு தலையிட்டு வருகிறது.

இது அதிகாரிகள் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நேற்று ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தனது பதவியை திடீர் என  ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து மோடியின்  பொருளாதார ஆலோசகர் சுர்ஜித் பாலா  ராஜினாமா செய்தார். இந்த நிலையில், தற்போது  உத்தரப்பிரதேச அரசுப்பணியாளர்தேர்வாணைய தலைவர்சந்திர பூஷன் பலிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையிலும், 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பரபரப்பான சூழலில் உயர் அதிகாரிகளின் பதவி விலகல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமாவை தொடர்ந்து, பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.  தற்போது முக்கிய அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருவது உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பை குறைத்து வருகிறது.

மத்திய அரசின் தவறான பொருளதாரக் கொள்கையே பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்வதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

You may have missed