டில்லி

ந்திரயான் 2 நிலவின் தென் துருவத்தில் இறங்கி பல புதிய உண்மைகளைக் கண்டறியும் என   இஸ்ரோ தலைவர் சிவன் கூறி உள்ளார்.

நிலவுக்கு ஏவப்பட சந்திரயான் 2 நேற்று காலை சந்திரனின் சுற்று வட்டத்தில் நுழைந்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.  அத்துடன் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி அன்று அதிகாலை 1.54 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 2 இறங்க உள்ளது.   இந்த நிகழ்வை பல உலக நாடுகளும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், “இந்தியாவின் சந்திரயான் 1 கடந்த 2008 ஆம் ஆண்டு நிலவின் சுற்றுப் பாதையில் நுழைந்தது.   இது இந்த விணகலத்டின் பயணத்தில் ஒரு புதிய சாதனை ஆகும்.     அத்துடன் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் நிகழ்வை உலகெங்கும் உள்ள பல நாடுகள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.  காரணம் இந்த விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் இறங்கும் முதல் விண்கலம் என்பதே ஆகும்

இதுவரை சீன உள்ளிட்ட எந்த நாடும் நிலவின் இருண்ட பகுதியான தென் துருவத்தில்  தங்கள் விண்கலன்களை இறக்கியது இல்லை.  இந்தப் பகுதியில் தண்ணீர் மற்றும் தாதுக்கள் ஏரளாமக உள்ளதால் இந்த பகுதியை இந்தியா தேர்வு செய்துள்ளது.   வரும் செப்டம்பர் மாத்ம் 7 ஆம் தேதி அன்று சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் பகுதி நிலவின் மத்திய ரேகைக்கு 71 டிகிரி தெற்கே உள்ள பகுதியில் இறங்க உள்ளது. இந்த பகுதியில் இறங்கும் சந்திரயான் 2  இதுவரை கண்டறியாத பலவற்றையும் கண்டுபிடிக்கும்.

இந்தப் பகுதியில் பல கோடி வருடங்களாகச் சூரிய ஒளி விழுந்ததில்லை.  இந்தப் பகுதியில் 10  கோடி டன் தண்ணீர், அமோனியா, ஹைடரஜன், மீதேன், சோடியம், பாதரசம் மற்றும் வெள்ளி ஆகியவை உள்ளன.   இந்த தென் துருவம் எதிர்கால ஆய்வுகளுக்கு மிகவும் பயன்படும்.  அதனால் இனி இந்த பகுதியில் ஆட்களை அனுப்பும் பணியில் அமெரிக்கா ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களான புளு ஆரிஜின் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவையும் முயற்சி செய்யும்.” எனத் தெரிவித்துள்ளார்.