பாஜக பற்றி சிவசேனா தலைவரிடம் புகார் கூறிய சந்திரபாபு நாயுடு

--

மும்பை

த்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு பாஜக மீதி அதிருப்தியில் உள்ள அந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிவசேனா தலைவரை சந்தித்து தன் குறையைக் கூறி உள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்துக்கு விசேஷ நிதி உதவி கோரி ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.    மத்திய அரசு ரூ. 1000 கோடி நிதி உதவி அளிப்பதாக வாக்குறுதி அளித்தது.    ஆனால் சமீபத்தில் தாக்கல் செய்யப் பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது தெலுங்கு தேசம் கட்சியினரிடையே அதிருப்தியை உண்டாக்கியது.

இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜகவின் முன்னாள் கூட்டாளியான சிவசேனாவின் தலவர் உதவ் தாக்கரேவுடன் பேசி உள்ளார்.   அப்போது அவர் ஆந்திராவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துவதாகக் கூறி உள்ளார்.    மேலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததில் இருந்தே கசப்பான பல அனுபவங்கள் ஏற்பட்டுதால் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   இந்த தகவல்களை சிவசேனா தெரிவித்துள்ளது.

பாஜகவின் நீண்ட நாள் கூட்டணிக் கட்சியான சிவசேனா கடந்த சில நாட்களாகவே பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.   விவசாயிகள் போராட்டம்,  பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி எஸ் டி, விலை உயர்வு,   புல்லட் ரெயில் போன்ற பல விஷயங்களில் பாஜக வுக்கு எதிரான நிலைப்பாட்டை சிவசேனா எடுத்துள்ளது.  இந்நிலையில் தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சிவசேனாவின் கட்சித் தலைவர் உதவ் தாக்கரேவிடம் பாஜக பற்றி குறை கூறியதை அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.