மராவதி

ந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தமது மாநிலத்தில் அனைத்து வீடுகளிலும் மார்ச் 31க்குள் கழிப்பறை கட்டாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.   ஆனால் இன்னும் பல மாநிலங்களில் அது பின்பற்றப் படுவதில்லை.   ஆந்திர மாநிலத்தில் அதே நிலை உள்ளது.   எனவே முதல்வர் சந்திரபாபு நாயுடு இது குறித்து அறிக்கை ஒன்றை இன்று அளித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “கழிப்பறை வசதி இல்லாத வீடு நமது மாநிலத்தில் இல்லை என்னும் நிலை உருவாக்குவதே எனது குறிக்கோள்.     தேவை எனில் நானே மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து இரவும் பகலும் மக்களுடன் தங்கி கழிப்பறைகளைக் கட்டுவேன்.   அதன் பிறகுதான் நான் தலைநகர் அமராவதிக்கு திரும்புவேன்.

இந்த வருடம் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை அமைத்தாக வேண்டும்.   அப்படி இல்லையென்றால் நான் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன்.   என் மீது பரிதாபப்பட்டாவது அதன் பிறகு மக்கள் கழிப்பறை அமைப்பார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறி உள்ளர்.