மம்தா பானர்ஜி – சந்திரபாபு நாயுடு சந்திப்பு

கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பாஜக வுடன் கூட்டணி வைத்திருந்தார். பாஜக அரசு ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத்தை எதிர்த்து அவர் கூட்டணியில் இருந்து விலகினார். அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணை அமைக்க சந்திரபாபு நாயுடு முயன்று வருகிறார்.

ஏற்கனவே சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் மற்ற எதிர்க்கட்சிகளை இணைக்க சந்திரபாபு நாயுடு சீதாராம் யெச்சூர், சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, முலாயம் சிங் யாதாவ் மற்றும் முக ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துள்ளார்.

வரும் 22 ஆம் தேதி டில்லியில் உள்ள ஆந்திர பிரதேச பவனில் அனைத்து எதிர்க்கட்சி கூட்டம் ஒன்றை நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். தாம் சந்தித்த அனைத்து தலைவர்க்ளையும் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள அவர் அழைத்துள்ளார்.

இன்று கொல்கத்தா நகரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திரபாபு நயுடுசந்தித்து பேசினார். அப்போது தாம் நடத்தப் போகும் அனைத்து எதிர்க்கட்சி கூட்டத்துக்கு மம்தாவை அவர் அழைத்ததாக தெரிய வந்துள்ளது. இக்கூட்டத்துக்கு மம்தா வருவதைப் பொறுத்து எதிர்க்கட்சி கூட்டணி முடிவாகும் என கூறப்படுகிறது.