பாஜக எதிர்ப்பு கூட்டணி : ராகுலை சந்திக்கும் சந்திரபாபு நாயுடு

டில்லி

ளும் பாஜகவுக்கு எதிராக கூட்டணை அமைப்பது குறித்து இன்று ராகுல் காந்தியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சந்திக்கிறார்.

வரும் டிசம்பர் மாதம் தெலுங்கானா மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா ராஷ்ட்ர சமிதியை இந்த தேர்தலில் தோற்கடிக்க காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

இந்த கூட்டணி தொடர்பாக இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திர்பாபு நாயுடு சந்திக்கிறார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியை அமைப்பது குறித்து அப்போது ராகுல் காந்தியுடன் நாயுடு பேச்சு வார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

தெலுங்கானா தேர்தல் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அப்போது இருவரும் வெளியிட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.