சென்னை:

ந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த 11ந்தேதி முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 18ந்தேதி (நாளை மறுதினம்)  வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மதியம் அறிவாலயம் வருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றபோது சுமார் 400க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பல வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்திய நிலையில், வாக்குச் சீட்டு முறையிலான வாக்குப்பதிவை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இன்று ஆந்திரமுதல்வர் சந்திரப்பாபு நாயுடு சென்னை வருகிறார்.  சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்  நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்ளும் நாயுடு, தொடர்ந்து  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  ஆர்.எஸ்.பாரதி உள்பட திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் வீட்டிற்கே சென்று அரசியல் நிலவரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மம்தா பானர்ஜி நடத்திய மாபெரும் கொல்கத்தா  பொதுக்கூட்டத்திலும்இருவரும்  பங்கேற்றனர்.  இந்த நிலையில் இன்று ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திக்க இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.