மகனுக்காக  அமைச்சரவையை மாற்றி அமைத்த சந்திரபாபு நாயுடு- ஆந்திராவில் சலசலப்பு

 

விஜயவாடா:
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையை இன்று மாற்றி அமைத்துள்ளார்.

இதில் 10 பேர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் இடம் பெற்றுள்ளார். அவருக்கு ஆளுனர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

லோகேஷ் அமைச்சராக பதவியேற்றதும், தனது தந்தை மற்றும் ஆளுனர் காலில் விழுந்து ஆசி வாங்கினார். சிலதினங்களுக்குமுன்புதான் சட்ட மேலவை உறுப்பினராக லோகேஷ் நியமிக்கப்பட்டார். இவருக்கு 34 வயதாகிறது.  ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த 5 பேர் பதவி நீக்கப்பட்டு,  ஒய் எஸ் ஆர் காங்கிரஸிலிருந்து தெலுங்குதேசம் கட்சிக்குத் தாவிய 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.