சந்திரலேகா ஐ.ஏ.எஸ். துணிவிற்கு பெயர்போனவர்… 72 வயதிலும் அதே துணிவுடன்

சந்திரலேகா ஐ.ஏ.எஸ். தமிழக அரசியல் வரலாற்றில் மறக்கமுடியாத பெயர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அவரை துணிவுடன் எதிர்கொண்ட ஒருவர் சுப்ரமணியம் சுவாமி என்றால், மற்றொருவர் சந்திரலேகா.

அவர் முகத்தில் திராவகம் வீசப்பட்டதெல்லாம் தனி கதை.

இந்த படத்தில் இருப்பது சாட்சத் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். தான், 72 வயதான போதும், சமீபத்தில் தென் துருவத்தில் உள்ள உறைபனி கண்டமான அண்டார்டிகா சென்றபோது எடுத்த புகைப்படம்.

சந்திரலேகாவின் மகன் அபிஜித் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் .

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.