சட்டப்பேரவையைக் கலைக்கும் முடிவை கைவிட்ட தெலுங்கானா முதல்வர்

தராபாத்

தெலுங்கானா முதல்வர் சட்டப்பேரவையை முன்கூட்டியே கலைக்க முடிவு எடுத்திருந்ததை முதல்வர் சந்திரசேகர் கைவிட்டுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அப்போதைய ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கபட்டது.    நாட்டின் 29 ஆவது மாநிலமான தெலுங்கானா மாநில முதல் முதல்வராக சந்திரசேகர் ராவ் பதவி ஏற்றார்.   தெலுங்கனா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் 4 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார்.   தெலுங்கானா சட்டசபையின் ஆயுட்காலம் இன்னும் 8 மாதத்தில் முடிவடைகிறது.

வரும் டிசம்பர் மாதம் சத்தீஸ்கர்,  மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   அடுத்த மாதம் இறுதியில் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ளது.    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா சட்டப்பேரவையை கலைத்துவிட்டு இந்த தேர்தல்களுடன் இணைந்து தேர்தல் நடத்த திட்டமிடிருந்தார்.

சுமார் இரு வாரங்களுக்கு முன்பு சந்திரசேகர் ராவ், “எனது கட்சி நடத்திய கருத்துக் கணிபில் தற்போது தேர்தல் நடந்தால் 119 இடங்களில் 100 இடங்கள் வெற்றி பெறுவேன்” என அறிவித்தார்.   தனது ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனை விளக்க மாநாடு ஒன்றை அவர் ஐதராபாத் அருகில் உள்ள கொங்கார கலன் என்னும் இடத்தில் இன்று நடத்த இருந்தார்.   இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

நேற்று இரவு பெய்த கனமழையால் மாநாட்டு பந்தல் சரிந்தது.  கூட்டம் நடைபெற இருந்த மைதானத்தில் வெள்ளம் தேங்கியதால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.   அத்துடன் முன் கூட்டியே சட்டப்பேரவையை கலைத்து விட்டு தேர்த்ல் நடத்தும் முடிவையும் சந்திரசேகர் ராவ் கைவிட்டுள்ளார்.   இந்த தகவலை அவர் கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.