மூன்றாவது அணி : இன்று தெலுங்கானா முதல்வருடன் மு க ஸ்டாலின் சந்திப்பு

சென்னை

தெலுங்கானா முதல்வர்  சந்திரசேகர் ராவ் இன்று கருணாநிதியையும் மு க ஸ்டாலினையும் சந்திக்க உள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வரும் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாம் அணியை அமைக்க முதலில் முயற்சி எடுத்தார்.  தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் அதே முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.    இதற்காக சந்திரசேகர் ராவ்  அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

இன்று சந்திரசேகர் ராவ் சென்னை வர உள்ளார்.  அவர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு இன்று இரவு வந்து திமுக தலைவர் கருணாநிதியையும் செயல் தலைவர் மு க ஸ்டாலினையும் சந்திக்க இருக்கிறார்.   அப்போது மூன்றாம் அணி குறித்து மு க ஸ்டாலினுடன் பேச உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.