29ம் தேதி கருணாநிதியை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்

ஐதராபாத்:

திமு.க. தலைவர் கருணாநிதியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரும் 29ம் தேதி சந்திக்கிறார். சென்னையில் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்கும் அவர் தொடர்ந்து செயல் தலைவர் ஸ்டாலினையும் சந்திக்கிறார்.

தேசிய அளவில் 3வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இவரது முயற்சிக்கு ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருந்தார் இந்நிலையில் கருணாநிதியை சந்திரசேகர ராவ் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்படுகிறது.