Random image

கோவிலுக்கு வைர நகையை நன்கொடையாக அளித்த முதல்வர்: நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

கோவிலுக்கு வைர நகையை நன்கொடையாக அளித்த விவகாரத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மீது ஹைதரபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பொதுநல வழக்கறிஞர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவால் சந்திரசேகர் ராவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
chandrasekar
விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள 57 வைரங்கள் பதிக்கப்பட்ட மூக்குத்தியை அம்மனுக்கு நன்கொடையாக சந்திரசேகர் ராவ் வழங்கியுள்ளார். இதை கண்டித்து பேராசிரியரான் பி.எல்.விஷ்வேஸ்வர ராவ் பொதுநல வழக்கு ஒன்ற தாக்கல் செய்தார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள கோயில்களுக்கு சந்திரசேகர் ராவ் அளித்துள்ள நன்கொடைகள் மாநிலத்தின் நிதியில் இருந்து எடுத்து கொடுத்ததால் சட்டவிரோதமானது என்று தனது மனுவில் ராவ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ராவ் பேசுகையில் “ இந்த விவகாரத்தில் நல்ல தீர்ப்பை நோக்கி நாங்கள் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளோம். இது சட்ட விரோதமானது. முதல்வரின் செய்கை அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமில்லாமல் மதசார்பின்மையை வெளிப்படுத்துகிறது “ என்று கூறினார்.

கோவிலுக்கு நன்கொடை அளிக்கும் அவர் தனிப்பட்ட முறையில் செய்திருக்க வேண்டும். மாறாக மக்கள் பணத்தை எடுத்து அவரின் பக்திக்கு செலவழிக்க கூடாது என்றும் ராவ் காட்டமாக கூறினார். இதேபோல் 2015ம் ஆண்டு சந்திரசேகர் ராவ் ரூ.5 கோடி செலவில் சண்டி யாகம் ஒன்றை செய்தார். பொதுவான பதவில் இருக்கும் இவர் இதுபோன்று செயல்படுவது நன்மையை அளிப்பதாக இல்லை. இந்த யாகத்தை நடத்தி முடிக்க அவருக்கு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தனிப்பட்ட முறையில் கடவுளை நோக்கி யாகம் செய்யும் இவருக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு என்று ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு அவர் செலவழிக்கும் பணம் பொதுமக்களுக்கு சொந்தமானது. அவர் செலவழிக்கும் அனைத்திருக்கும் மக்களிடம் பதிலளிக்க வேண்டும். தெலுங்கானாவில் வறுமைக்கோட்டிற்கு கீழ் 30 சதவிகித மக்கள் வாழ்கின்றனர். ஏராளமான குழந்தைகள் பாதியிலேயே பள்ளியில் இருந்த நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் கவனம் செலுத்த நேரமில்லாத முதல்வருக்கு கோவில்களுக்கு நன்கொடை அளிக்க மட்டும் நேரம் கிடைக்கிறது. மக்களுக்கு சேவை பொறுப்பில் இருக்கும் அவர் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவ முயற்சிக்க வேண்டும் என்று ராவ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருப்பதி கோயிலுக்கு ரூ. 5 கோடி செலவில் தங்க கிரீடம் உட்பட ஆபரண நகைகளை நன்கொடையாக சந்திரசேகர் ராவ் அளித்துள்ளார். மேலும், வாராகலில் உள்ள பத்ரகாலி கோயிலுக்கு ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் தங்க கிரீடத்தையும், மஹ்பூபாபத் பகுதியில் உள்ள வீரபத்ர சுவாமி கோயிலுக்கு தங்க மீசையை காணிக்கையாகவும் அளித்தது குறிப்பிடத்தக்கது.