சமூக விலகலை புறக்கணித்த சந்திரசேகர் ராவின் மகள்…

ஹைதராபாத்

உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பரவுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் மக்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, சொகுசு விடுதி ஒன்றில் 500 க்கும்  மேற்பட்டோருக்கு விருந்து அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரசேகர் ராவ் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அவர் மகளின் இச்செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

சமூக வலை தளங்களில் அந்த விருந்து நிகழ்வு தற்போது பலராலும் பகிரப்பட்டு, கேள்விக்கும் உள்ளாகி வருகிறது.

இவ்விருந்தில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஸ்ட்டிர சமிதி சார்பில் பலர் கலந்து கொண்டுள்ளனர். கவிதா நிஜாமாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…