ஸ்ரீஹரிகோட்டா:

நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். மேலும்,  புவி சுற்று வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதையில் சேர்ந்தது டென்ஷனான 30 நிமிட நடவடிக்கை  என்றும் கூறினார்.

சந்திரயான்2 இன்று வெற்றிகரமான புவி வட்டப்பாதையில் இருந்த நிலவின் சுற்று வட்டப்பாதைக் குள் செலுத்தப்பட்டது.  இன்று நிலவின் சுற்றுப் பாதையில், சந்திரயான்-2 நுழைந்தபோது, இஸ்ரோ ஆய்வு மையத்தில் சுமார் 200 விஞ்ஞானிகள், மற்றும் அதிகாரிகள் கூடியிருந்தனர். இந்த பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதுமே, இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி இந்த சாதனையை வரவேற்றனர்.

இதையடுத்து இஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இன்று காலை 9.30 மணியளவில், நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான் -2 விண்கலம் செலுத்தப் பட்டதாக கூறினார். மேலும, இந்த  30 நிமிட ஆபரேஷனின்போது, டென்ஷனும், பதட்டமும் எங்களுக்கு கூடிக்கொண்டே இருந்ததாக கூறியவர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டபோது, பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் அளித்தது என்று கூறினார்.

சந்திரயான்2  ஒவ்வொரு கட்டங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தவர், நேற்றிலிருந்து நிலவின் ஈர்ப்பு சக்தியில் சந்திரயான்-2 இயங்கி வந்ததாகவும்,  செப்டம்பர் 2ஆம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது, அது விக்ரம் லேண்டர், விண்கலத்தில் இருந்து பிரியும் நிகழ்வு என்றும், அப்போது, விண்கலத்திலிருந்து, லேண்டர் சுற்றுப்பாதையில் இருந்து பிரிக்கப்படும். செப்டம்பர் 3 ஆம் தேதி, லேண்டரின் அமைப்புகள் இயல்பாக இயங்குவதை உறுதிசெய்ய சுமார் 3 வினாடிகள் ஒரு சிறிய ஆபரேஷன் செய்வோம். அதையடுத்தே  செப். 7ஆம் தேதி விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.